ஸ்டாலின் தொடரட்டும்- பாதாகைகளுடன் கோவையில் அணிவகுத்த SDPI கட்சியினர்….

கோவை: ஸ்டாலின் தொடரட்டும் என பதாகைகளுடன் SDPI கட்சியினர் அணிவகுத்தனர்.

கோவை கொடிசியா மைதானத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கருப்பொருளைக் கொண்டு நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பரப்புரை செய்கிறார்.

குறிப்பாக இந்த பரப்புரையில் கோவையை சேர்ந்த ஆறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ( கோவை தெற்கு செந்தில் பாலாஜி, கோவை வடக்கு துரை செந்தமிழ் செல்வன், கிணத்துக்கடவு சபரி கார்த்திகேயன், பொள்ளாச்சி நித்தியானந்தன், வால்பாறை சுதாகர், சூலூர் தளபதி முருகேசன்) அறிமுகம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

சுமார் 2000க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது இதில் திமுக உட்பட கூட்டணி கட்சியினர்களும் பங்கேற்கின்றனர். சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவை வந்து தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்து இருந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் “ஸ்டாலின் தொடரட்டும்” என்ற தனித்தனி எழுத்துக்கள் கொண்ட பதாகையை ஏந்தி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் – எஸ்.பி.வேலுமணி!

அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் என எஸ்.பி. வேலுமணி கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நம்பிக்கை தெரிவித்தார்.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...