கோவை: மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மேகங்கள் சூழ்ந்ததால் மக்கள் சந்திர கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.
புவியானது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே வரும் காலகட்டத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த நிகழ்வைக்காண தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இதனிடையே கோவையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களும் இந்த நிகழ்வைக்கான ஆவலுடன் இருந்தனர்.
மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியின் ஆசிரியர்கள் முயற்சியில், மேங்கோ எஜுகேஷன் அமைப்பினர் சார்பில் அப்பள்ளிக்கு தொலைநோக்கி கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து மாலை முதல் பள்ளி வளாகத்தில் குவிந்த மாணவ-மாணவிகள் தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தைக் காண ஆவலோடு இருந்தனர். ஆனால், மேகங்கள் சூழ்ந்ததால் கிரகணத்தை மாணவர்களால் முழுமையாக பார்க்க முடியவில்லை

கோவையின் பல பகுதிகளையும் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் சந்திர கிரகணத்தை பல்வேறு பகுதி மக்களும் முழுமையாகக் காண முடியாத சுழல் ஏற்பட்டது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈