கோவை: எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தங்களை வெற்றி அடைய செய்ய வேண்டுமென கோவை வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
சசிகலாவால் தான் எம்ஜிஆர் ஜெயலலிதா வெற்றி வாகை பெற்றார்கள் எனவும் எம்ஜிஆர்,ஜெயலலிதா விசுவாசிகள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோவை கவுண்டம்பாளையம் வேட்பாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் மல்லிகா கவுண்டம்பாளையத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோவை கவுண்டம்பாளையம் வேட்பாளர் மல்லிகா,
எம்ஜிஆர்,ஜெயலலிதா விசுவாசிகள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு சேவைகளை செய்யப்போவதாகவும் வீ.கே சசிகலா எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உடன் இருந்தவர் என்பதால் தென்னந்தோப்பு சின்னத்திற்கு அனைவரும் வாக்களிப்பார்கள் என கூறினார்.
சசிகலாவால் தான் எம்ஜிஆர் ஜெயலலிதா வெற்றி வாகை பெற்றார்கள் என்பது உள்ளது, எனவே தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

