Header Top Ad
Header Top Ad

சூலூர் அருகே வீட்டு சுவர் ஏறி குதித்து திருட முயன்ற நபர்- சிசிடிவியால் பிடித்த உரிமையாளர்

கோவை: கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபரை கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மடக்கிப் பிடித்த குடும்பத்தினர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

கோவை, சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற நபரை வீட்டின் உரிமையாளர் விரட்டி பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சூலூர் போலீசார் வட மாநில வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம், சூலூர் கண்ணம்பாளையம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் தனது புதிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  வெள்ளிக்கிழமை நள்ளிரவு, மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளார்.

அப்போது வீட்டிற்குள் இருந்த மோகனுக்கு சத்தம் கேட்டு, உடனடியாக சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்த போது, மர்ம நபர் சுவர் ஏறுவது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து, தப்பியோட முயன்ற அந்த நபரைத் துரத்திப் பிடித்தனர்.

இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், குற்றவாளி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திபாஸ் சர்தார் (வயது 27) என்பதும், இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது தெரியவந்தது.

Advertisement


மோகனின் புகாரின் அடிப்படையில், சூலூர் காவல் நிலைய போலீசார் திபாஸ் சர்தார் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Recent News