கோவை: இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் MANAK MANTHAN நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் மைய அரங்கத்தில் MANAK MANTHAN நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், மருத்துவமனைகளில் கடைப்பிடிக்க வேண்டிய தரமான கட்டண ரசீது (Billing) செயல்முறைகளுக்கான தேவைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்த கருத்துக்கள் பகிரப்பட்டது.

இந்நிகழ்வில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனை மேலாளர்கள், மருத்துவ சிகிச்சை மையங்களின் நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனின், செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு மற்றும் IMA Hospital Costing Committe-ன் தலைவர் டாக்டர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
மேலும், மாவட்ட மருத்துவ சேவைகளுக்கான இணை இயக்குனர் டாக்டர் சுமதி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தர கட்டுப்பாடுகள், Billing செயல்முறைகளில் கடைபிடிக்க வேண்டிய தர நிலைகளின் அவசியம் குறித்த கருத்துக்களை சிறப்ப விருந்தினர்கள் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வினை இந்திய தர நிர்ணய அமைவனம் கோவை அலுவலக தலைமை அதிகாரி ஜி.பவானி மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.



