16வது முறையாக கோவை வருகிறார் ஸ்டாலின்; இதுவரை எதெற்கெல்லாம் வந்துள்ளார் பாருங்க…!

கோவை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இது வரை நான்கரை ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு 15 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று 16 வது முறையாக வருகை தர உள்ளார்.

ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை எதற்கெல்லாம் கோவை வந்துள்ளார்:-

29-5-2021

கொரோனா ஆய்வுப் பணிக்காக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பி.பி.இ பாதுகாப்பு ஆடையுடன் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக, கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு தலா 10 கார் ஆம்புலன்ஸ் வீதம், 50 கார் ஆம்புலன்ஸ் சேவையை தமிழக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

30-5-2021

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு செயலர்கள் மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

22-11-2021

கோவை வ.உ.சி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 587.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 25,123 பயனாளிகளுக்கு 646.61 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

23-11-2021

கொடிசியா வளாகத்தில் முதலீட்டாளர்கள் முதல் முகவரி தமிழ்நாடு மாநாட்டில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

19-5-2022

ரெசிடென்ஸி ஓட்டலில் தொழிலதிபர்கள் மற்றும் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

24-8-2022

ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட விழாவில் 81,486 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

11-3-2023

கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவில் பங்கேற்றார். மக்களுடன் முதல்வர் தொடக்க விழா – செம்மொழிப் பூங்கா அடிக்கல்.

18-12-2023

ஆவாரம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். காந்திபுரத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

13-3-2024

பொள்ளாச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 19,329 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

9-8-2024

கோவை அரசுக் கலைக்கல்லூரியில் தமிழ்புதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார்.

5-11-2024

கோவை விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 லட்ச ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவிலான தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட 468.89 ஏக்கர் நிலங்களுக்குரிய ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்படும் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

6-11-2024

அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தந்தை பெரியார் நூலகம் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பொள்ளாச்சி நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு சி.சுப்பிரமணியம் வளாகம் என்று பெயர் சூட்டி, அங்கு பெருந்தலைவர் காமராஜர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி நா. மகாலிங்கம் சிலைகளை திறந்து வைத்தார். ஆழியாறு அணை கட்டுமானத்தின்போது உயிர் நீத்த தியாகிகள் நினைவு மண்டபம் திறந்து வைத்தார்.

9-10-2025

கோவை, கொடிசியா வளாகத்தில் புத்தொழில் மாநாடு – 2025ஐ தொடங்கி வைத்து, தமிழ்நாடு புத்தொழில் சூழமைவு அறிக்கை – 2025 அறிக்கை வெளியிட்டார். கோவை, கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1791 கோடி ரூபாய் மதிப்பில், தமிழ்நாட்டின் மிக நீளமான 10.1 கி.மீ. நீளம் கொண்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று பெயர் சூட்டி திறந்து வைத்தார்.
9-10-2025ல் கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 126.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க நகை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கோவை மாவட்டத்திற்கு 15 முறை வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

25-11-2025

இதனிடையே இன்று 16வது முறையாக கோவைக்கு வருகை தந்து செம்மொழி பூங்காவை திறந்து வைக்கிறார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.