கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த குரங்கு ஒன்றால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த நூற்றுக்கணக்கான அலுவலர்களும் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த இடங்களில் அவ்வப்போது குரங்குகள் தென்படுவது வழக்கம். இந்த நிலையில் மதிய வேளையில் ஆட்சியர் அலுவலக வாகன நிறுத்துமிடம் உள்ள வளாகத்திற்குள் குரங்கு ஒன்று புகுந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தேநீர் கடை மகளிர் சுய உதவி குழுவினரின் சிறுதானிய உணவகம் அருகில் அந்த குரங்கு சுற்றி திரிந்தது.
அந்த குரங்கு சாப்பிட்டு போட்ட உணவை உண்பதற்காக கழிவுகள் தொட்டியில் இருந்தவற்றை உண்டது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால் உணவருந்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த குரங்கை பிடிப்பதற்கு வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

