“தவெகவுக்கு வாக்களிப்பவர்கள் முட்டாள்கள்” – தொண்டாமுத்தூரில் நாதக வேட்பாளர் ரஜபு நிஷா சர்ச்சை பேச்சு

கோவை: ஆட்சியில் இருந்த போது முழுக்க முழுக்க ஊழல் செய்தவர் எஸ்.பி.வேலுமணி என்றும், தவெகவினருக்கு வாக்களிப்பவர்கள் முட்டாள்கள் என்று நாதக இளம் வேட்பாளர் ரஜபு நிஷா கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுத்தாக்கல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

துணையை காப்பாற்ற சண்டை போட்ட GENTLEMAN.. பற்ற வைத்த திரிஷா!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே நாம் தமிழர் கட்சி சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் கோவை மாவட்ட இளம் வேட்பாளர் ரஜபு நிஷா (25) இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இருக்கும் போது அக்கா.. வெளியே வந்ததும் அநாகரிகமா? விஜய் மீது நடிகை புகார்!

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொண்டமுத்தூர் தொகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தில் மக்கள் ஏரளாமான பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும், நாங்கள் ஆய்வு செய்யச் சென்றால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

மேலும், அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்களின் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ரஜபு நிஷா, இலவசங்களை எதிர்ப்பதாகக் கூறிய தவெகவினர் தற்போது செம்படங்களை பரிசாகக் கொடுத்துவருவதாகவும் கூறினார்.

மேலும், இந்த முறை கூட்டணி அமையாததால் மட்டுமே தவெக தனித்துப் போட்டியிடுவதாகவும், என்றும் நாம் தமிழர் கட்சி கொள்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்த அவர், தவெகவுக்கு வாக்களிப்பவர்கள் முட்டாள்கள் என்று கடுமையாக சாடினார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Make In India திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது- கோவையில் கனிமொழி பிரச்சாரம்…

கோவை: Make In India வை செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை கேஸ்க்கு வந்திருக்காது என கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி Make In India திட்டத்தை செய்திருந்தால் கேஸ்க்கு இந்த அளவிற்கான ஒரு...

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...