கோவை: கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகள், பள்ளி வளாகங்கள் மற்றும் சாலைகளின் ஓரங்களில் மழைநீர் தேங்கியதைத் தொடர்ந்து, மாநகராட்சியின் நீர் உறிஞ்சும் வாகனத்தின் மூலமாக இடையர்பாளையம் சாலை வஉசி வீதி, குமரன் வீதி இரண்டாவது தெரு, மகேஸ்வரி காலனி, பாலாஜி கார்டன்,
அன்பு நகர், முல்லை நகர், சத்தி சாலை அத்திபாளையம் பிரிவு, சரவணம்பட்டி கட்டபொம்மன் வீதி, சின்னவேடம்பட்டி நேதாஜி தெரு, பாலக்காடு மெயின் ரோடு பி.கே.புதுர், குனியமுத்தூர் எஸ்.என்.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக மழைநீர் வெளியேற்றப்பட்டது.
அதேபோன்று, மாநகராட்சிக்கு உட்பட்ட சேரன் மாநகர், ராமாத்தாள் லே- அவுட் சாலை, விளாங்குறிச்சி மெயின் ரோடு, குமுதம் நகர், ஐஸ்வர்யா கார்டன், உருமாண்ட பாளையம் சாலை,
கந்தசாமி லே-அவுட், காந்திநகர் சாலை, தயிர்இட்டேரி சாலை காந்திமா நகர், பாரதி ரோடு, ஜே.எம்.வி கார்டன், கருவாட்டு கம்பெனி சாலை, லட்சுமிபுரம்,
வரதராஜபுரம், சின்னப்பன் தெரு, வேலப்பன் தெரு, கல்பனா லே-அவுட் மற்றும் ராதிகா அவன்யூ உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை கருங்கற் ஜல்லி கலவை மூலமாக சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மழை தொடர்பாக பொதுமக்களால் அவ்வப்போது அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422- 2302323, வாட்ஸ் ஆப் எண் 81900 00200 ஆகிய எண்களிலும் மற்றும்
மண்டல வாரியாக வடக்கு மண்டலம்-8925975980, மேற்கு மண்டலம்-8925975981, மத்திய மண்டலம்-8925975982, தெற்கு மண்டலம்-9043066114, கிழக்கு மண்டலம்-8925840945 ஆகிய எண்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.



