கோவை: கோவையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை வரவேற்றனர். மேலும் அதிமுக தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர்.
தொடர்ந்து இன்று காலை பல்லடத்தில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெற்றனர்.
எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்த நிலையில் பதிலளிக்காமல் புறப்பட்டார். ஓபிஎஸ் டெல்லி சென்றது குறித்தான கேள்விக்கும் பதில் அளிக்காமல் விமான நிலையத்திற்குள் சென்றார்.
அவரை வழியனுப்பி வைத்து விட்டு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடமும் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர் அவரும் பதிலளிக்காமல் சென்றார்.



