கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
டிட்வா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டின் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது.
இதனிடையே சென்னை வானிலை மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு மற்றும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நாளை (டிச 3) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிப்பிற்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
.


