கோவையில் ஜி.டி. நாயுடு சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது என நடிகர் விஜயை விமர்சித்தார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கோவை வடவள்ளி துணை சுகாதார நிலைய கட்டிடத்தை கூடுதலாக குடியிருப்பாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் செவிலியர் கனிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கண் நீர் அழுத்த நோய் (குளுக்கோமா) ஏற்படும் அபாயம் இருப்பதால் முறையான கண் பரிசோதனை அவசியம் என கோவை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை கொண்ட வேளாண்மைக்கான பொறியியல் தீர்வுகள் குறித்து சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் ரசிகர்களை சந்தித்த வடம் படக்குழு, முதல்வர் அறிவித்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டம் நல்லது என்றும், அதை வேண்டுகோளாகவே வைக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஜித்து சாஜி மற்றும் நண்பர்கள் பொது இடத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை போலீசார் விசாரணை செய்தனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.