கோவை மக்களே எனக்கு பாதுகாப்பு- துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்…

கோவை: கோவைக்கு வருகை புரிந்துள்ள துணை குடியரசுத் தலைவர் கோவை மக்களே எனக்கு பாதுகாப்பு என தெரிவித்துள்ளார்.

கோவைக்கு வந்துள்ள துணை குடியரசுத் தலைவர் காலையில் கொடிசியாவில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிறகு டவுன்ஹால் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவரைக் காண காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பாஜகவினரை சந்தித்தார். அப்போது அனைவரும் துணை குடியரசு தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது அவரிடம் பாதுகாப்பை மீறி இரண்டு இளைஞர்கள் உள்ளே நுழைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை எனக்கு கோவை மக்களே பாதுகாப்பு என பதில் அளித்துச் சென்றார்.

Recent News

Video

Join WhatsApp