அட்ராசக்க… இன்று இரண்டாவது முறையாக குறைந்தது தங்கம் விலை!

கோவை: தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று காலை குறைந்த நிலையில், தங்கம் விலை தற்போது மீண்டும் அதிரடி சரிவைச் சந்தித்துள்ளது.

கோவையில் அக்டோபர் மாத தொடக்கத்தில் தங்கம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.10,890க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 10ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.11,260ஆக இருந்தது. உச்சபட்ச விலையாக கடந்த 17ம் தேதி கிராம் ரூ.12,200க்கும், ஒரு பவுன் ரூ.97,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தங்கம் விலை சரிவைச் சந்தித்து வருகிறது. இன்றும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவைச் சந்தித்துள்ளது. இன்று காலை கிராமுக்கு ரூ.150ம், பவுனுக்கு ரூ.1,200ம் குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,300க்கும், ஒரு பவுன் ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனிடையே தங்கம் விலை தற்போது மீண்டும் குறைந்துள்ளது.

கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு மீண்டும் ரூ.1,800ம் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளை பவுனுக்கு ரூ.3,000 விலை குறைந்து, தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,075க்கும், ஒரு பவுன் ரூ.88,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recent News

கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி கண்காட்சி இரு தினங்கள் நடைபெறுகிறது…

கோவை: ராணுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது. கோவை அண்ணா சிலை அருகே உள்ள...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp