கோவை: கோவையின் முக்கிய துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக உக்கடத்தில் நாளை (1ம் தேதி) பின்வரும் இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடங்கள் பின்வருமாறு:-
வெரைட்டி ஹால் ரோடு, ஒப்பணக்கார வீதி, டி.கே.மார்க்கெட், செல்வபுரம், கென்னடி காலனி, கரும்புக்கடை, ஆத்துபாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முக நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனிசாமி நகர் மற்றும் ஸ்டேட் பங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில்நிலையம், லாரி பேட்டை
உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பு மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டு மாறுபடலாம்.










 
                                    
