சூலூரில் போதையில் கத்தியுடன் சுற்றிய நபருக்கு தர்ம அடி!

கோவை: சூலூர் அருகே போதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் போதையில் வந்த ஆசாமி ஒருவர் அங்கும் இங்கும் தள்ளாடிக்கொண்டு கூச்சலிட்டார். அவரிடம் கேள்விகேட்ட பொதுமக்களை தரக்குறைவாகப் பேசி தாக்க முயன்றார்.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது, கத்தி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த நபரைக் கட்டி வைத்த பொதுமக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், அந்த போதை ஆசாமியைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் தஞ்சையைச் சேர்ந்த உதயகுமார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Advertisement

Recent News