பேரூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம்- இடம், தேதி அறிவிப்பு…

கோவை: பேரூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் தீத்திபாளையம் கிராமம், புது ரோடு, லோட்டஸ் மஹாலில் வருகின்ற 14.10.2026 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு 06.10.2026 செவ்வாய்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) மற்றும் பேரூர் வட்டாட்சியர் ஆகியோர் தீத்திபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், பொது மக்களிடம் மனுக்களை பெற உள்ளார்கள்.

பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) அவர்களிடம் வழங்கலாம். இதுதவிர வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு), பேரூர் வட்டாட்சியர் மற்றும் தீத்திபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் கொடுக்கலாம்.

Advertisement

மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 14.10.2026 அன்று பேரூர் வட்டம்தீத்திபாளையம் கிராமம்புது ரோடு, லோட்டஸ் மஹாலில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ஆட்சித்தலைவர் நலத்திட்ட உதவிகளை மாவட்ட பவன்குமார் வழங்குவார்.

எனவே இப்பகுதி பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

SIR முடிந்த நிலையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்…

கோவை: SIR முடிந்த மாநிலங்களில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையமானது தனது 29.09.2026-ல் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாகசிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள்...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...