கோவையில் ரயில்வே தேர்வில் முறைகேடு- கேரளா நபர் கைது…

கோவை: கோவையில் முறைகேடாக ரயில்வே தேர்வு எழுதிய கேரளா மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவையை அடுத்த ஆலாந்துறை பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு ரயில்வே குரூப் 4 தேர்வுகள் 3 நிலைகளாக நடைபெற்றன. இந்த தேர்வை 292 பேர் எழுதினார்.

அப்பொழுது கணினி ஆய்வக எண் 8 – ல் 35 பேர் தேர்வு எழுதிக் கொண்டு இருந்தனர். இதில் கேரள மாநிலம் பாலக்காட்டு நடுபத்திபாறாவை சேர்ந்தவர் அனிஷாத் என்பவர், தனது ஐடெல் ரக செல்ஃபோனை ரகசியமாக மறைத்து வைத்து முறையீடாக தேர்வு எழுதிக் கொண்டு இருந்தார்.

இதை தேர்வு அறை கண்காணிப்பாளர் டார்வின் என்பவர் கண்டுபிடித்தார். உடனே அனிஷாத்தை பிடித்து ஆலாந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து, அனிஷாத்தை கைது செய்தனர். முறைகேடாக ரயில்வே தேர்வு எழுதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

Video

Join WhatsApp