கோவை: கோவை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் நேற்று மலைப்பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மாலை நேரத்தில் லேசான மழை பதிவானது.
இதனிடையே இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு வானிலை மையம் அறிவித்துள்ளது.