Header Top Ad
Header Top Ad

கோவையில் எஸ்.பி.வேலுமணி திண்ணை பிரச்சாரம்!

கோவை: கோவையில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்களிடையே அதிமுக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழகம் அம்மாபேரவையின் சார்பில் குனியமுத்தூர் பகுதியில் திண்ணை பிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த திண்னை பிரச்சாரத்தில் எஸ்.பி.வேலுமணி தொழில் நிறுவனங்கள், கடைகள், மற்றும் வீடுகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து அதிமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் திரைபபட நடிகர் வையாபுரி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய அவர்,
நான்கு ஆண்டு காலமாக மக்களுக்கு எதுவுமே செய்யாத ஆட்சி நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பாக கோவை மாவட்டத்திற்கும், இந்த குனியமுத்தூர் பகுதிக்கும் இதுவரை ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வந்ததாக திமுகவினரால் சொல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியின்போது சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், தடையில்லா மின்சாரம் உட்பட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததாகவும் ஆனால் தற்பொழுது உள்ள திமுக அரசு மக்களுக்கு எதுவும் செய்யாமல் சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் எங்கு பார்த்தாலும் வழிப்பறி,கஞ்சா, பாலியல் பிரச்சனைகள், அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றார். தமிழகத்திற்கு மீண்டும் எடப்பாடியார் முதல்வராக பதவியேற்கும் காலமே விடிவு காலமாக அமையும் என்றார்.

அதைத்தொடர்ந்து குனியமுத்தூர் ரைஸ் மில் சாலையில் மக்களின் வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்து திண்ணையில் அமர்ந்து அப்பகுதி மக்களிடம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.

Advertisement

Recent News