எஸ்.பி.வேலுமணி இல்ல திருமணம்: போலீஸ் வழக்கு!

கோவை: கொடிசியாவில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி இல்ல திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவுகள் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி கொடிசியா அரங்கில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அக்கட்சித் தொண்டர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வந்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகளை வரவேற்கும் விதமாக அவினாசி சாலையில் முதல், கொடிசியா அரங்கம் செல்லும் வரை பிரம்மாண்ட அலங்கார வளைவுகள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், அனுமதியின்றி அலங்கார அமைப்புகளை வைத்ததாக, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அ.தி.மு.க வார்டு செயலாளர் லட்சுமணன் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு சிலைகள் மூடல், பேனர்கள் அகற்றல், பறக்கும் படை வாகனங்கள் துவக்கம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.