Header Top Ad
Header Top Ad

கோவையில் மாநகராட்சி பூங்காவில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

கோவை: கோவையில் மாநகராட்சி பூங்காவில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் 4க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி காந்திமா நகர் பகுதியில் மாநகராட்சி பூங்கா ஒன்று உள்ளது. நாள்தோறும் இங்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் அப்பகுதி மக்கள் அங்கு நடைபெச்சி மேற்கொண்டு இருந்த பொழுது சந்தன மரங்கள் வெட்டப்ட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

உடனடியாக இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்த பொழுது நான்குக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recent News