Header Top Ad
Header Top Ad

கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது- காரணம் என்ன?

கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை கோவை, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டதால் காவல் துறையினர் கைது செய்தனர் !!!

Advertisement

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்  அனைவரும் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற 2021 – ம் ஆண்டு தி.மு.க அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும்,
ஒப்பந்த முறையை ரத்து செய்து மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒப்பந்த  தூய்மை பணியாளர்கள் கோவை மாநகராட்சியை கண்டித்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது நீண்ட நேரம் வாகனங்களை செல்லாமல் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாகன ஓட்டிகள் தவித்து நின்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் இடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் இருப்பினும் கலைந்து செல்லாமல் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் கைது செய்து தூய்மை பணியாளர்களை அழைத்துச் சென்றனர்.

Advertisement

பணி நிரந்தரம் செய்யும் வரை அரசாணை 62-ன் படியும் மற்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படியும் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் மாதா, மாதம் பிடித்தம் செய்யப்படும் PF உள்ளடங்கிய சம்பள ரசீதை வழங்க வேண்டும், ESI மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும்.

ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் ரூபாய் 770 சம்பளம் வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்த நிலையில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் 540 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாகவும், இதன் ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது எந்த விதமான பதில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

Recent News