கோவை: அம்மன்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும், அங்கு ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. கோவையில் வெயில் தகிக்கும் நிலையிலும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று தெற்கு தொகுதிக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு திமுக தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் – நந்தியா தம்பதியினர் தங்களது ஆண் குழந்தையை செந்தில் பாலாஜியிடம் கொடுத்து, குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கோரிக்கை விடுத்தனர்.

குழந்தையை கையில் பெற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, அக்குழந்தைக்கு “அகில்யாழன்” என்ற பெயரைச் சூட்டினார்.
தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும், திமுக ஆட்சி அமைந்த உடன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என உறுதி அளித்தார்.


திருந்தவே மாட்டீங்களா, மக்களே? பகுத்தறிவு எங்கே போச்சு? உங்க பையன் 10 வருஷம் கழிச்சு கேள்வி கேக்கப் போறான், அப்போ முழிப்பீங்க!!!
வேற்று கிரக மனிதனுக்கு எப்படி ? அதுவும் நம்ம கோவையில்???