Header Top Ad
Header Top Ad

இது திரைப்பட மாதம்! அம்மாடியோவ் ஒரே மாதத்தில் 16 படங்கள்; இதோ லிஸ்ட்!

செப்டம்பர் மாதம் தமிழ்த் திரைத்துறைக்கு விழாக்காலம் என்று கூறும் அளவுக்கு இந்த மாதம் மொத்தம் 16 திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், அப்படங்களின் லிஸ்ட் மற்றும் படத்தின் சிறுகுறிப்பை இந்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

Madharaasi

சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள மதராசி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த படமாக இந்த படம் வெளியாகிறது. செப்டம்பர் 5ல் படம் வெளியாகிறது.

Ghatti

முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். இவருடன் நடிகர் விக்ரம் பிரபுவும் நடித்துள்ளார். கிராமப்புறக் கதையை மையமாகக் கொண்டு கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. செப்டம்பர் 5ல் படம் வெளியாகிறது.

Bad Girl

Advertisement

வெற்றி மாறனின் கிராஸ் ரூட் இந்த படத்தை தயாரித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இப்படம் வெளியாகிறது. அஞ்சலி சிவராமன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை வர்ஷா பாரத் இயக்கியுள்ளார். பெண்கள் மையக் கதைக்களத்தில் உருவாகியுள்ளதால் அதிக ஆர்வம் கிளப்பியுள்ளது. செப்டம்பர் 5ல் படம் வெளியாகிறது.

Gandhi Kannadi

சமூக ஆர்வலரும், நடிகருமான KPY Bala இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் நமிதா கிருஷ்ணமூர்த்தி இணைந்துள்ள இப்படத்தை ஷெரீஃப் இயக்கியுள்ளார். சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. செப்டம்பர் 5ல் படம் வெளியாகிறது.

The Girlfriend

ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள படம். ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இந்த நகர ரொமான்ஸ் படம், ஹெஷாம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ளார்.

Andha 7 Naatkal

நடிகர் பாக்கியராஜ் இயக்கத்தில் 1981ல் வெளியான அந்த 7 நாட்கள் என்ற அதே தலைப்பில் வெளியாகும் இப்படத்தில் மீண்டும் பாக்கியராஜ் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அஜிதேஜ், ஸ்ரீஸ்வேதா நடிப்பில் எம்.சுந்தர் இந்த படத்தை இயக்குகிறார். பெஸ்ட்காஸ்ட் கபீர்தாஸ் படத்தை தயாரித்துள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார்.

Kiss

பிக்பாஸ் புகழ் கவின் நடிப்பில் இப்படம் வெளியாக உள்ளது. இவருடன் ப்ரீதி அஸ்ரானி இணைந்துள்ளார். இளைய தலைமுறைக்கேற்ற ரொமான்ஸ் படமாக உருவாகியுள்ளது, சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 19ல் வெளியாகிறது.

Thanal

அதர்வா முரளி, லவன்யா திரிபாதி நடிப்பில் உருவான அதிரடி படம் தனல். ரவீந்திர மாதவா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 12ல் வெளியாகிறது.

Bomb

பயங்கரமான வில்லன் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள பாம் படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். நாசர், அபிராமி, காளி வெங்கட் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 12ல் வெளியாகிறது.

Seetha Payanam

ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன் நடித்துள்ள சீதா பயணத்தை நடிகர் அர்ஜுன் தயாரித்து இயக்குகிறார். மகளை வைத்தே தந்தை இயக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Blackmail

ஜி.வி.பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் படம் பிளாக்மெயில். இப்படத்தை மூ.மரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ்க்கு சிறிது இடைவெளிக்குப் பின் வெளியாகியுள்ள இப்படத்திற்கு சம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

Mirai

தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ் நடித்துள்ள அறிவியல்-அதிரடி படம். கார்த்திக் கத்தம்னேனி இயக்கியுள்ளார்.

Thandakaaranyam

அட்டகத்தி தினேஷ், கலையரசன் நடித்துள்ள படம். அடியன் அதிரை இயக்கியுள்ள இந்த படம் மர்ம கதையம்சத்தில், காடு சார்ந்த பின்னணியில் அமைந்துள்ளது. செப்டம்பர் 19ல் வெளியாகிறது.

Sakthi Thirumagan

விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் சக்தி திருமகன். அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். இந்த படமாவது விஜய் ஆண்டனிக்கு கைகொடுக்குமா என்று பார்க்க வேண்டும்.

Kumara Sambavam

டெலிவிஷன் தொடர்களில் பிரபலமான குமரன் தங்கராஜன் நாயகனாக நடித்துள்ளார். பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள இது குடும்ப நகைச்சுவை படம். செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது.

Recent News