Header Top Ad
Header Top Ad

துணை ஜனாதிபதி ஆகிறார் கோவை மண்ணின் மைந்தர்!

கோவை: கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 1957ல் அப்போதைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திற்குள் இருந்த தாராபுரத்தில் பிறந்தார்.

Advertisement

பட்டதாரியான இவர், சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கத்தில் பணியாற்றி வந்தார். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு கடந்த 1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக அரசியலில், பாஜக பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் முக்கிய பங்காற்றி வந்தார்.

இவரது திறமையைப் பார்த்த பாஜக மேலிடம் கடந்த 2016ம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணனை மத்திய கயிறு வாரிய தலைவராக நியமித்தது. பின்னர், கடந்த 2023ம் ஆண்டு இவரை ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் நியமித்தது.

கடந்த 2024ல் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, அதே ஆண்டில் ஜூலை மாதம் மஹாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Advertisement

இப்படி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்த சி.பி.ராதாகிருஷ்ணனை இந்தியாவின் துணை ஜனாதிபதியாக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது மேற்கு மாவட்ட மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இதனிடையே, “துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை தேர்வு செய்து நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி” என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதியாக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தற்போது வயது 68.

Advertisement

Advertisement

Recent News