நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்: சாதிப்பெயர் சர்ச்சைக்கு சிங்காநல்லூர் வேட்பாளர் சமாளிப்பு…!

கோவை: தன் பெயருக்கு பின்னால் “நாயுடு” சேர்க்கப்பட்டதை தட்டச்சுப் பிழை எனக் கூறி, சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி சமாளித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்த ஸ்ரீநிதி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயருக்கு பின்னால் நாயுடு என்ற அவரது சாதிப்பெயர் இடம் பெற்றிருந்தது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ஸ்ரீநிதி நாயுடு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்திறுந்தார்..

அதில், நான் ஸ்ரீநிதி வெங்கடேசன் மோகன். தமிழ்நாடு பிறந்து வளர்ந்து மண்ணின் விழுமியங்களை உள்வாங்கியவள்.

தற்போது சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயருடன் சாதி அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்து எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தட்டச்சுப் பிழையால் தான் ஏற்பட்டுவிட்டது. என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும் எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியை மட்டுமே அடையாளமாக கொண்டவள் நான் என்று கூறி சமாளித்துள்ளார்.

இவர் பல்வேறு கட்சிகளில் இருந்து மாறி அண்மையில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அது மட்டுமின்றி ஸ்ரீநிதி நாயுடுவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளரை மாற்ற கோரியும் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Make In India திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது- கோவையில் கனிமொழி பிரச்சாரம்…

கோவை: Make In India வை செயல்படுத்தி இருந்தால் இந்த நிலை கேஸ்க்கு வந்திருக்காது என கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி Make In India திட்டத்தை செய்திருந்தால் கேஸ்க்கு இந்த அளவிற்கான ஒரு...

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...