கோவை: கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பெருகி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. ஆர்பாட்டம் நடத்தினர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நாய் கருத்தடை மையம் செய்யப்பட்டு வருகிறது . கோவை மாநகராட்சி நிர்வகிக்கும் இந்த கருத்தடை மையத்தில், கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பிடித்து வரும் தெரு நாய்கள், கருத்தடை செய்து இதே பகுதியில் விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கருத்தடை செய்யப்படும் நாய்கள் இதே பகுதியில் விடுவதனால், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 82, 84, 86வது வார்டு மக்கள் இதனால் நாய் கடிபடுவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

பெரியவர்கள் குழந்தைகள் என பலரும் நாய் கடிபடுவதாகவும் பொது மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். எனவே நாய்களுக்கு கருத்தடை செய்து நாய்களின் அதே வாழ்விடப் பகுதியில் விடுபட வேண்டும் என்றும், மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் கருத்தடை மையத்தை இடமாற்ற வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்.