Header Top Ad
Header Top Ad

கோவையில் மீனவர்களுக்கு மானிய விலை பரிசல்

கோவை: கோவையில் மானிய விலையில் மீனவர்களுக்கு பரிசல்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Advertisement
Lazy Placeholder

கோவை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
சார்பில் உள்நாட்டு மீனவர்களுக்கு 50% மானியத்தில் மீன் பிடி பரிசல்களை 15 மீனவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழங்கினார். சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கம்,மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்கம்,கோவை வட்ட சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசல்கள் வழங்கப்பட்டது.

18,500 ரூபாய் மதிப்பு கொண்ட பரிசல் மீனவர்களுக்கு 50% மானிய விலையில் 9,250 ரூபாய்க்கு மீன்வளத்துறை சார்பாக வழங்கப்பட்டது. மீதமுள்ள 50% பணத்தை மீனவர்கள் செலுத்தி உள்ளனர்.இந்த பரிசல் ஈரோடு மாவட்டத்திற்கு 15 பரிசல்கள்,திருப்பூர் மாவட்டத்திற்கு 15 பரிசல்கள்,ஈரோடு மாவட்டத்திற்கு 30 பரிசல்கள் என மொத்தம் 60 பரிசல்கள் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த பரிசலானது சேலம் மாவட்டம் மேட்டூரில் தயாரிக்கப்பட்டு பின்னர் வாகனம் மூலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Lazy Placeholder

மானிய விலையில் பரிசல் வழங்கப்படுவது மிகவும் உதவியாக இருக்குமென மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசிற்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles