கோவை: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் முதலீடுகளுக்காக தமிழ்நாடு அரசு (StartupTN)கோவையில் புத்தொழில் மாநாட்டை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட்-அப் டிஎன் (StartupTN) அமைப்பு சார்பில், கோவையில் அக்டோபர் 9, 10 ஆம் தேதிகளில் “தமிழ்நாடு குளோபல் ஸ்டார்ட்-அப் சம்மிட் – 2025” (Global Startup Summit Tamil Nadu 2025) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், “ரோட்ஷோ”, “பேனல் டிஸ்கஷன்”, “டிமாண்ட் டே” போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் புதுமைகள் தொடர்பாக நிபுணர்கள் இதில் கலந்துரையாட உள்ளனர்.
Startup Summit 2025

மேலும், மாணவர்களுக்காக சிறப்பு “ஸ்டூடன்ட் ஸ்டார்ட்-அப் எக்ஸ்போ” ஏற்பாடு செய்யப்பட்டு, MVP நிலை ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்களது கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் வாய்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் திட்டங்கள் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
மாநாட்டின் முக்கிய அம்சமாக முதலீட்டாளர்-ஸ்டார்ட்-அப் சந்திப்பு (Investor Connect) நடைபெறுகிறது.
செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், வேளாண்மை, பாதுகாப்பு தொழில்நுட்பம், வாகன தொழில்நுட்பம் உள்ளிட்ட 15 துறைகளில் புதிய நிறுவனங்களை இந்த மாநாட்டில் பங்கேற்க StartupTN அழைத்துள்ளது.

இந்த மாநாடு புதுமைகளை ஊக்குவித்து, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு உலகளாவிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் தொழில் முனைவோர் பின்வரும் தமிழக அரசின் லிங்க் மூலம் தங்கள் வருகையை (Register) பதிவு செய்யலாம்
விருப்பமுள்ள தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்
மாணவர்கள் தங்கள் படைப்புகள் குறித்து விண்ணப்பிக்க Form கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைய இங்கே க்ளிக் செய்யவும்
இந்த பயனுள்ள செய்தியை நம்ம ஊர் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கு பகிர்ந்து, அவர்கள் தொழிலுக்கான முதலீடுகளை ஈர்க்க உதவிடுங்கள்