சென்னை: 2016 முதல் 2021 வரை உள்ள ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள்,இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் என திரைத்துரையில் பல்வேறு துரைகளின் கீழ் தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரைக்குமான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் மற்றும் நடிகைகள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்:-
கடந்த 2016ம் ஆண்டுக்கான சிறந்த படமாக மாநகரம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டின் சிறந்த நடிகராக புரியாத புதிர் பாம்பு சட்டை படத்திற்காக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக பாம்பு சட்டை படத்திற்காக கீர்த்தி சுரேசும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டுக்கான சிறந்த படமாக அறம் படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகராக தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்காக கார்த்தியும், சிறந்த நடிகையாக அறம் படத்திற்காக நயன்தாராவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டுக்கான சிறந்த படமாக பரியேறும் பெருமாள் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகராக வட சென்னை படத்திற்காக தனுஷும், சிறந்த நடிகையாக செக்கச் சிவந்த வானம் படத்திற்காக ஜோதிகாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டுக்கான சிறந்த படமாக அசுரன் தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகராக ஒத்த செருப்பு படத்திற்காக பார்த்திபனும், சிறந்த நடிகையாக அசுரன் படத்திற்காக மஞ்சு வாரியரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டுக்கான சிறந்த படமாக கூழாங்கல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக சூரரைப்போற்று படத்திற்காக சூர்யாவும், சிறந்த நடிகையாக சூரரைப்போற்று படத்திற்காக அபர்ணாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ஜெய் பீம் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக சார்ப்பட்டா பரம்பரை படத்திற்காக ஆர்யாவும், சிறந்த நடிகையாக ஜெய்பீம் படத்திற்காக லிஜூ மோல் ஜோசும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2022ம் ஆண்டுக்கான சிறந்த படமாக கார்கி படமும், சிறந்த நடிகராக டாணாகாரன் படத்திற்காக விக்ரம் பிரபுவும், சிறந்த நடிகையாக கார்கி படத்திற்காக சாய் பல்லவையும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
என்ன பரிசு?
இதைத்தவிர பல்வேறு பிரிவுகளில் திரைப்படக் கலைஞர்கள், படைப்பாளர்கள் மற்றும் சின்னத்திரையினருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.
சிறந்த நடிகர்-நடிகைகளுக்கு ஒரு பவுன் தங்கப்பதக்கமும், நினைவுப் பரிசும் வழங்கப்பட உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி சென்னையில் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

