கோவை: கோவையில் போதை முதியவர் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஒன்று வாகன ஓட்டிகள் மீது மோதும் கோர காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாலமலை ரோட்டில் அதிவேகமாக ஒரு கார் சென்றது.
கட்டுப்பாட்டை இழந்த கார், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் கல்லூரி மாணவிகள் மற்றும் 2 வாகன ஓட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.
மேலும், அங்கிருந்த மரத்தின் மீதும், வாகனங்கள் மீதும் மோதி நின்றது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தூக்கி எறியப்பட்டனர். மரம் முறிந்து விழுந்தது.
தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் காரை ஓட்டி வந்தது யார் என்று பார்த்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மயில்சாமி என்ற 70 வயது முதியவர் என்பதும், அவர் ‘புல் மப்பில்’ காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரைப் பிடித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தின் வீடியோ காட்சிகள்
விபத்தை ஏற்படுத்திய போதை முதியவர் கைது #Coimbatore pic.twitter.com/O3XNTgDjdp
— News Clouds Coimbatore (@newscloudscbe) August 10, 2025