கோவை: கோவையில் வாடகை வண்டியில் சார்ஜ் போட்டிருந்த செல்போனை திருடிய நபர், பிடிப்பட்டதும் பாட்டு கேட்க தான் எடுத்தேன் என்று கூறிய காட்சிகள் வெளியாகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி அருகே வாடகை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவரது செல்போன்க்கு சார்ஜ் போட்டு விட்டு அதே வண்டியில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு நபர்,b சார்ஜ் போட்டிருந்த செல்போனை நைசாக எடுத்தார். அப்போது செல்போனில் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் தூக்கத்தில் இருந்து விழித்த அந்த ஓட்டுனர், செல்போனை எடுத்து வைத்திருந்த நபரை கையும் களவுமாகப் பிடித்தார்.
உடனே அந்த ஓட்டுனர், தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்போனைத் திருட முயன்ற நபரைப் பிடித்து விசாரித்தார்.
அப்போது அவர், தான் இந்த பகுதியில் இரும்புகளை எடுத்து எடைக்குப் போட்டுக் கொண்டிருப்பதாகவும், செல்போனை திருடவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், செல்போனை பாட்டு கேட்கலாம் என்று எடுத்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
எதற்காக எடுத்தாய் என்று கேட்டதற்கு, “அதான் தூக்கத்தில் இருந்து எந்திரிச்சு செல்போனை வாங்கீட்டீங்களே, அப்புறம் என்ன?” என்று சர்வசாதாரணமாக கேட்டுள்ளார்.
மனநிலை சரியில்லாத நபர் போல பேசியதால், அந்த பகுதி மக்கள் அவரை எச்சரித்து அனுப்பினர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.