தவெக தலைவர் விஜய் பிறந்தநாள்- கோவையில் உடல் உறுப்பு தானம் செய்த பெண் நிர்வாகிகள்!!!

கோவை: த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் உட்பட 15 பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்…

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று ஜூன் 22 ந்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விபத்தில் பலர் பலியாகிய நிலையில் யாரும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார்..

அதன் படி கடந்த ஆண்டு பெரிய அளவில் அவரது கட்சியினர் பிறந்தநாளை கொண்டாடாத நிலையில் இந்த ஆண்டு வெகு விமரிசையாக விஜய் பிறந்த நாளை கொண்டாடி வரும் த.வெ.க.வினர் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில்,தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் பாபு தலைமையில் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.15 நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ள நிலையில் இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளது நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

தங்களது மறைவுக்கு பின்னர் தங்களது அனைத்து உடல் உறுப்புகள் பிறர் உயிர் வாழ பயன்படும் வகையில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உள்ளதாக தெரிவித்து நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்..

Advertisement

முன்னதாக அரசு மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களுக்கு த.வெ.க.தலைவர் விஜய் படம் பொறித்த கடலை மிட்டாய்களை கட்சியினர் வழங்கினர்.தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்வதற்காக அவர்களுக்கு தேவையான ஊதுபத்தி, பேனா, மிட்டாய் வகைகளை தவெக’வினர் வழங்கினர்.

Recent News