குமுதா ஹேப்பி: கோவையில் மீன் விலை வீழ்ச்சி | Fish rate Coimbatore

கோவை: கோவையில் மீன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மீன் வாங்கிச்சென்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமலில் இருந்தது.

Advertisement

இந்த தடை காலம் கடந்த வாரம் ஞாயிறன்று நிறைவடைந்தது. தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தடை காலம் அமலில் இருந்த நிலையில், கோவைக்கு கேரளாவில் இருந்து மீன்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படன.

மீன் பிடி தடை காலம் நிறைவடைந்த நிலையில், ராமேஸ்வரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டிற்கு மீன்கள் வந்து குவிந்துள்ளன. வரத்து அதிகரித்திருப்பதால் மீன்கள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

Advertisement

உக்கடம் மார்கெட்டில் கடந்த வாரம் ரூ.1,300க்கு விற்பனையான வஞ்சரம் மீன் இந்த வாரம் ரூ.700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், பாறை ரூ.600ல் இருந்து ரூ.320க்கும், மத்தி ரூ.400ல் இருந்து ரூ.150க்கும், நெத்திலி ரூ.420ல் இருந்து ரூ.200க்கும், செம்மீன் ரூ.650ல் இருந்து ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வாவல் ரூ.900ல் இருந்து ரூ.620க்கும், அயிலை ரூ.450ல் இருந்து ரூ.250க்கும், கெலாத்தி லெதர் ஜாக்கெட் ரூ.550ல் இருந்து ரூ.250க்கும்,

சங்கரா ரூ.400ல் இருந்து ரூ.200க்கும், கொடுவா ரூ.850ல் இருந்து ரூ.550க்கும் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.நண்டு ரூ.680ல் இருந்து ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மீன் பிடி தடை நீங்கியஇரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவையில் மீன்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மக்கள் கூட்டம் அலைமோதியது. அடுத்தடுத்த வாரங்களில் மீன் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...