18வது கோயம்புத்தூர் விழா நடைபெறும் தேதியும் முக்கிய நிகழ்வுகளும் அறிவிக்கப்பட்டன…

கோவை: கோயம்புத்தூர் விழாவின் 18வது பதிப்பு கோலாகலமாக துவக்கியது.

கோவை மாநகர் ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த கோயம்புத்தூர் விழா விழாவை நடத்தி வருகின்றனர்.

Advertisement

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவின் 18வது பதிப்பு, ‘இன்ஃபினிட்டி எடிஷன்’ என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், ஆகியோர் விழாவைத் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வு ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் நடைபெற்றது. கோவை விழா 2025 இன் தலைவர் சண்முகம் பழனியப்பன், யங் இந்தியன்ஸ் – கோவை அமைப்பின் தலைவர் நீல் கிக்கானி மற்றும் பல்வேறு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisement

இதுகுறித்து கோயம்புத்தூர் விழா 2025ன் தலைவர் சண்முகம் பழனியப்பன் கூறுகையில், இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழா நவம்பர் 14 முதல் 24 வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது என்றும் சுமார் 150க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு, நகரம் முழுவதையும் ஒன்றிணைக்கும் பொதுவான கருத்தை இவை கொண்டு செல்லும் என்று அவர் கூறினார்.

இந்த விழாவில் இடம்பெறும் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ‘ஸ்கை டான்ஸ்’ (Sky Dance) கவனத்தை பெறக்கூடியதாக உள்ளது. இது லேசர் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் கோயம்புத்தூரின் வரலாறு மற்றும் நகரின் வளர்ச்சிப் பயணத்தை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தினமும் மாலை 6.30 மணி முதல் கொடிசியா வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது என்றார்.

விழாவின் மற்றும் பல முக்கிய நிகழ்வுகளாக – ஓவிய வீதி (Art Street), கோவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா (Coimbatore Science and Technology Fest), பாரா விளையாட்டு மற்றும் சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் (Para Sports and Special Sports), கோயம்புத்தூரின் திறமையை வெளிப்படுத்தும் என்றும் ‘கோயம்புத்தூர்ஸ் காட் டாலண்ட்’ (Coimbatore’s Got Talent), கோவை விழா மாரத்தான், இசை மழை, தி பிட்ச் (The Pitch), பேரணி (Rally for Resilience), விழா வீதி (Vizha Veedhi), வைப்ஸ் ஆப் செட்டிநாடு (Vibes of Chettinad) இடம்பெறும் என்றார்.

மேலும் கோவை வேக விழா எனும் தலைப்பில் கோ-கார்ட் பந்தயம், ஆட்டோகிராஸ் சாம்பியன்ஷிப், கார் மற்றும் பைக் சாகச நிகழ்ச்சி (Car and Bike Stunt Show), மோட்டார் பைக் பேரணி (Motorbike Rally) நடக்கவுள்ளது என்றும் பாரம்பரிய விழா (Parampariya Vizha), பட்டிமன்றம், வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கண்காட்சி, பிக்கில்பால் போட்டி (PickleFest), பேரன்பு எனும் மூத்த குடிமக்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி,

க்ரீன் அப் அண்ட் க்ளோ அப் கோவை (Green Up & Glow Up Coimbatore) எனும் தூய்மைப்பணி முயற்சி, மின் கழிவு சேகரிப்பு முயற்சி மற்றும் ரூப்பே ரெடி (Ruppe Ready) குழந்தைகளுக்கான நிதி மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்வு போன்ற பல நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Recent News

துவங்கியது கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழா…

கோவை: கோயம்புத்தூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். கோவை வ.உ.சி மைதானத்தில் கோயம்புத்தூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இதனை இன்று தமிழ் வளர்ச்சி...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp