கோவையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்…

கோவை: தமிழ்நாடு முதலமைச்சரின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்நேரில் பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.95க்குட்பட்ட போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள பி.வி.ஜி.திருமண மண்டபத்தில், நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ (8வது) முகாமினை கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று, பார்வையிட்டார்.

அரசின் சார்பில் நோயின்றி நலமுடன் வாழ குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் என பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், இன்னுயிர் காக்கும் 48 என்ற சாலை விபத்திற்கான சிறப்பு திட்டம், முதலமைச்சரின் விரிவாக காப்பீட்டு திட்டம், இதயம் காப்போம், சிறுநீரகம் காப்போம் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம். முதல்வர் மருந்தகம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில், நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை தமிழ்நாடு முதலமைச்சர், தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இச்சிறப்பு மருத்துவ முகாம் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கோவையில் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய் இருதய நோய்நுரையீரல் நோய், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், ஆயிஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம். புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 18 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும்இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வழங்குதல் மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றது.

முன்னதாக, இம்மருத்துவ முகாமில் 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தினையும் மேயர் வழங்கினார். மேலும் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 7 எண்ணிக்கையிலான நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமில் மொத்தம் 15481 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கமலஹாசனை கோவை மக்கள் வீட்டிற்கு அனுப்பிய காரணம் இது தான்- வானதி சீனிவாசன் சாடல்…

கோவை: கமலஹாசன் பேசுவது புரியாததால் தான் கோவை மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பினார்கள் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை சங்கனூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் மோடி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சாலையோர...

Video

Join WhatsApp