வீட்டில் கோபித்துக் கொண்டு கோவை வந்து தவித்த கேரளா சகோதரிகள்!

கோவை: வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து உக்கடம் பேருந்து நிலையத்தில் தவித்த கேரளா சகோதரிகளை மீட்ட பிங்க் பேட்ரோல் போலீசார் அவர்களை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

உக்கடம் பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு 2 சிறுமிகள் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தனர். அப்போது கோவை மாநகரில் இரவு நேரங்களில் ரோந்து சென்று கண்காணிக்கும் பிங்க் பெட்ரோல் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் 2 சிறுமிகளையும் அழைத்து பேசினர்.

அப்போது அவர்கள் கேரளா மாநிலம் வாளையார் அருகே உள்ள கஞ்சிக்கோடு பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. 17, 14 வயதுடைய அக்காள், தங்கையான இருவருக்கும் அங்கு பள்ளியில் படித்து வருவதும், பெற்றோர் நேற்று திட்டியதால் இரவில் வீட்டில் கோபித்துக் கொண்டு பேருந்தில் உக்கடத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

அதிகாலை 3 மணிக்கு அதிகம் மக்கள் நடமாட்டம், இல்லாத நேரத்தில் தவித்த சிறுமிகளை மீட்ட போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அதன் பின்னர் அவர்களது பெற்றோர் குறித்த விபரங்களை போலீசார் கேட்டு அவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றனர்.

ஆனால் பெற்றோர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே கோவை போலீசார் வாளையார் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு சிறுமிகள் விபரம் குறித்து தெரிவித்தனர். வாளையார் போலீசார் பனங்காட்டில் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவர்களது பெற்றோரிடம் விபரத்தைக் கூறினர்.

Advertisement

அதன் பிறகு தான் பெற்றோருக்கு இந்த விபரீதம் தெரிந்துள்ளது. உடனே பெற்றோர் அங்கிருந்து கார் மூலம் உக்கடத்திற்கு புறப்பட்டு வந்தனர். தொடர்ந்து பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறிய போலீசார் சிறுமிகள் 2 பேரும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

  1. மொபைல்போன் காரணமாக நமது வாழ்கை சூழ்நிலையே அதி வேகமாக மாற்றதை அடைந்துள்ளது.

    அதனால் இளம் பிஞ்சுகள் மனது பாதிப்படைந்து எளிதில் குழம்பி விடுகிறது.

    தற்போதுள்ள சூழ்நிலையில் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் அதிகமாவும் உள்ளது.

    பள்ளியில் பாடங்களிலோ அல்லது வகுப்பு நேரங்களிலோ அவர்களின் மன அழுத்தம் குறைய பயிற்சி வழங்க அரசு முன்வரவேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கவுண்டம்பாளையம் அருகே காவலரின் மிரட்டல் வீடியோ வைரல்

கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே அபராத விவகாரத்தில் காவலர் மிரட்டிய வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Join WhatsApp