கோவை; சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சாரமான ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தை கோவையில் நா.கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இன்று துவங்கியுள்ளனர்
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரக்கூடிய சூழலில் திமுக கட்சியின் சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையில் திமுகவினர் ஈடுபட உள்ளனர்.
இந்த பிரச்சாரத்தை திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இன்று துவக்கி வைத்து சென்னையில் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் திமுக நிர்வாகிகள் மக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் விவரித்து உறுப்பினர் சேர்க்கையில் நடத்தப்படுகிறது. இதற்காக திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தை இன்று துவங்கினர். இதன் துவக்க நிகழ்ச்சி டவுன்ஹால் பகுதியில் மணிக்கூண்டு முன்பு அமைக்கப்பட்டுள்ள ஓரணியில் தமிழ்நாடு லோகோ முன்பு துவங்கியது.
இதில் முன்னாள் எம்எல்ஏவும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான நா.கார்த்திக் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கங்களை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். உறுப்பினர் சேர்க்கையின் போது திமுக அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் திமுக அரசின் நலத்திட்டங்கள் அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் குறித்து விவரித்தனர்.