இறந்தும் மூவருக்கு வாழ்வு கொடுத்தார் பாஸ்கரன்!

கோவை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பாஸ்கரன் என்ற இளைஞரைன் உடல் உறுப்புகள் 3 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  மடத்துக்குளம், அருகே உள்ள மடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் என்ற விவசாயி. இவரது மனைவி விசாலாட்சி இவர்களுக்கு பாஸ்கரன் (29) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

பாஸ்கரன் 10 ஆம் வகுப்பு படித்து விட்டு அங்கு உள்ள பேப்பர் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரனின் தாயார் விசாலாட்சி இறந்து விட்டார். 

அதற்கு 16 ம் நாள் காரியம் நடைபெற இருந்தது. இதற்காக பொருட்கள் வாங்க பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி பிரியங்கா, 11 மாத குழந்தை மற்றும் அவரது சகோதரி உள்ளிட்டோர் காரில் உடுமலைப்பேட்டைக்குச் சென்றனர். 

அங்கு பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது வழியில் அவர்களது கார் விபத்தில் சிக்கியது. இதில் பாஸ்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், பாஸ்கரன் ஆபத்தான கட்டத்தில் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச் சாவு அடைந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். 

அப்போது அவரது குடும்பத்தினர், பாஸ்கரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினால் மற்றவர்கள் பயன்பெறுவார்கள் என்பதால் அவற்றை தானமாக கொடுக்க முன்வந்தனர்.

இதைத் தொடர்ந்து அவரது கண், கல்லீரல், சிறுநீரகம், உள்ளிட்ட பாகங்கள் தானமாக அளிக்கப்படு உள்ளது. இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெற உள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் அவ்வளவு தான்- கோவையில் தள்ளுவண்டி கடைக்காரர்கள் அச்சம்…

கோவை: சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் தள்ளுவண்டி கடையினர் உள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடை நடத்த முடியாமல் போய்விடும் வாழ்வாதாரம் பெரியதளவு பாதிக்கப்படும் என்று சாலையோர தள்ளுவண்டி கடையினர்...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.