Header Top Ad
Header Top Ad

என்னை ராகிங் செய்துள்ளார்கள் அடித்துள்ளார்கள்- கோவை நடிகர் ராஜு பேட்டி…

கோவை: என்னை ராகிங் செய்துள்ளார்கள் சண்டையில் என்னை அடித்துள்ளார்கள் என கோவையை சேர்ந்த நடிகர் ராஜு தெரிவித்துள்ளார்.

ராகவ் மிர்தாத் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் ராஜு ஜெயமோகன், பவ்யா த்ரிகா பாதையா பிரசாத் ஆகியோ நடிப்பில் வெளியாகியுள்ள Bun Butter Jam திரைப்படம் தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கோவை பிராட்வே சினிமாவில் திரைப்பட குழுவினரான இயக்குனர் ராக்வ் மிர்தாத், நடிகர் ராஜு ஜெயமோகன், மைக்கேல் ஆகியோர் ரசிகர்களை சந்தித்து படம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

Advertisement

நடிகர் ராஜூ ஜெயமோகன் பேட்டி திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. இந்த திரைப்படம் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெண்கள் அதிகமானோருக்கு பிடித்துள்ளது குடும்பமாக பலரும் வந்து திரைப்படத்தை கண்டு செல்கிறார்கள் என தெரிவித்தார். ஒரே நாளில் அதிகமான திரைப்படங்கள் வெளியாகும் பொழுது எத்தனை திரைகள் என்று முடிவு எடுப்பது நடிகர்கள் , இயக்குனர்கள் கையில் இல்லை அது இயற்கையாக எவ்வாறு நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது என தெரிவித்தார்.

கல்லூரி படிக்கும் பொழுது நான் யாரையும் ராகிங் செய்ததும் இல்லை சண்டையிட்டுக் கொண்டதும் இல்லை என்னை ராகிங் செய்துள்ளார்கள் சண்டையில் என்னை அடித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டார். என்னை பலருக்கும் அடையாளம் காட்டியது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் என்றும் கூறினார்.

அனைத்து விமர்சகர்களையும் நாங்கள் வரவேற்கிறோம் நாங்கள் ஏதேனும் திரைப்படத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் உங்களது விமர்சனங்களை பார்த்துவிட்டு தான் செல்வோம், ஒரு திரைப்படத்தில் பாசிடிவ் நெகட்டிவ் இரண்டையும் கூறுவது தான் ஒரு விமர்சனமாக இருக்கும் அதைத் தவிர்த்து கிண்டல் செய்வது தவறு என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.

கையில் கேமரா இருக்கிறது என்பதற்காக செய்தியாளர்கள் அதிகாரப்பூர்வமாக செய்ய வேண்டியதை பலரும் செய்கிறார்கள் என்றார். தொடர்ந்து மூன்று படங்கள் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். பாட்ஷா திரைப்படம் ரிலீஸ் தற்பொழுது செய்யப்பட்டுள்ளதை பார்க்கும்பொழுது சற்று பயமாக இருந்தது ஆனால் நம்முடைய படம் ஓடும்பொழுது அருகில் தலைவர் படமும் ஓடுகிறது என்பது ஒரு பெருமையாக உள்ளது என தெரிவித்தார்.

இயக்குனர் ராகவ் மிர்தாத் பேட்டி குடும்பத்தினர்களின் விமர்சனங்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் இந்த படம் பிடித்துள்ளது என்று தெரிவித்தார். அனைவரும் இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என கேட்டுக்கொண்ட அவர் திரைப்படம் பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிருங்கள் எனவும் கேட்டுக் கொண்டார். இதில் விக்ராந்த் நடித்துள்ளார் திடீரென அவரை பார்க்கும்பொழுது அதற்கான வரவேற்பும் நன்றாக உள்ளது.

இந்தப் படத்தின் பெயரை வைப்பதற்கு சிறுவயதில் சாப்பிட்ட ஏதேனும் ஒரு உணவு மிகவும் பிடித்திருக்கும் எனவே எதார்த்தமாகத்தான் இந்த பெயர் அமையப்பெற்றது என்று தெரிவித்தார். பொதுமக்கள் திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பே அந்த திரைப்படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் பொழுது சிறிய படங்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

இந்த படம் பெண்களுக்கான ஆதரவான படம் எனக் கூறிய அவர் காதல் தடைபட்டால் ஆண்கள் பலரும் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் இல்லையென்றால் அந்த பெண்ணை துன்புறுத்துகிறார்கள் அதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை நமது இலக்குகளை நோக்கி சென்றாலே போதும் எனக் கூறினார்.

மைக்கேல் பேட்டி,
இது போன்ற சின்ன படங்களை பெரிய படங்கள் ஆக்க வேண்டியது ரசிகர்களாகிய உங்களுடைய பொறுப்பு அனைவரும் குடும்பங்களுடன் திரையரங்குகளுக்கு வந்து பாருங்கள் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles