Header Top Ad
Header Top Ad

போலீஸ் விசாரணையால் ‘கிலி’… கோவையில் திருடிய ஆடுகளை மீண்டும் கொண்டுவந்த திருடர்கள்!

கோவை: கோவையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து திருடிய ஆடுகளை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து விட்டு ஓட்டம் பிடித்துள்ளது ஆடு திருடும் கும்பல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர் 55. இவருக்கு சொந்தமாக வெள்ளிப்பாளையம் அருகே தோட்டம் உள்ளது. அங்கு செல்வி நாட்டுக்கோழிகள் மற்றும் 2 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

Advertisement
Lazy Placeholder

இதனிடையே கடந்த வாரம் 2 ஆடுகளும் காணாமல் போனது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், 4 இளைஞர்கள் 2 பைக்குகளில் வந்து நோட்டமிட்டது தெரியவந்தது.

தங்களைப் பற்றி போலீசார் தீவிரமாக விசாரிப்பதை அறிந்த ஆடு திருட்டு கும்பல், திருடிய 2 ஆடுகளையும் மீண்டும் அதே இடத்தில் நேற்று காலை விட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே ஆடு திருடும் கும்பல்கள் குறித்து போலீசார் தோட்டத்து வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Lazy Placeholder

இதுகுறித்து, போலீசார் கூறுகையில்,” நகை, பணம் திருட்டு போல் கால்நடைகளை திருடி விற்பனை செய்வதும் நடைபெறுகிறது. ஆடுகள் தான் முக்கிய டார்கெட்டாக உள்ளது. ஸ்கூட்டர் அல்லது கார்களில் எளிதில் ஆடுகளை கடத்த முடியும் என்பதால் ஆடுகள் அதிக அளவில் கூறி வைக்கப்படுகிறது. சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே புகார் அளிக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில், “ஆடு திருடும் கும்பல்கள் மீது தயவு தாட்சனம் இன்றி கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும். போலீசார் கண்டிப்பு காட்டாவிட்டால் மீண்டும், மீண்டும் ஆடு திருடும் சம்பவம் நடக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு கால்நடைகள் பெருமளவு கைக்கொடுக்கின்றன,” என்றார்.

Recent News

Latest Articles