முதல்வரிடம் திருமாவளவன் இந்த கேள்வியை முன்வைக்க வேண்டும்- வானதி சீனிவாசன்

கோவை: திமுக பி.ஜே.பியோடு கூட்டணி வைத்து இருந்தார்களே, அப்போது அவர்களுடைய கருத்தியலோடு முழுமையாக ஒத்துழைத்து அதை ஏற்றுக் கொண்டு கூட்டணி வைத்தீர்களா ? என முதல்வரிடம், திருமாவளவன் கேள்வி கேட்க வேண்டும் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை, கண்ணப்ப நகர் பகுதியில் நடந்த சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மைய வகுப்புகள் துவக்க விழா பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பெண்களுக்கான இலவச பயிற்சியை துவங்கி வைத்தார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
மக்களோடு நெருக்கமாக அவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக மத்திய அமைச்சர்களை இங்கு அழைத்து வருவதும், அல்லது இங்கு இருக்கக் கூடிய தொழில் அமைப்புகளை சமூக அமைப்புகளை மத்திய அமைச்சர்களோடு சந்திக்க வைப்பதுமாக பாரதிய ஜனதா நிர்வாகிகள் தொடர்ச்சியாக பணி புரிந்து வருகிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்கின்ற வகையிலே, சட்டப் பேரவையில் கோவை தெற்கு தொகுதிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக மேற்கு மண்டலம் முழுவதும், தொழில் வளமாகட்டும், கட்டமைப்பு வசதிகளாகட்டும், மெட்ரோ ரயில் திட்டம் ஆகட்டும், இவைகளில் இருக்கிற குறைகளை சட்டமன்றத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறோம். மாநில அரசும் பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கோவை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக நிலங்கள் மத்திய அரசில் ஒப்படைக்கப்பட்டதற்கு பின்பாக, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி இருக்கிறது.
இந்த பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்பதற்காக, இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் இருக்கக் கூடிய தொழில் நிர்வாகிகளுடன் மத்திய விமானத்துறை அமைச்சரை சந்தித்தோம். அடுத்து வரக் கூடிய இரண்டு வருட காலத்திற்கு உள்ளாக புதிதாக முனையங்களை ஏற்படுத்துவதற்கான பணிகளை துவங்கி இருக்கிறோம்.

Advertisement

நிச்சயமாக மிக குறைவான காலத்திற்கு உள்ளாக அதை நாங்கள் முடித்துக் கொடுக்கிறோம். இந்தப் பகுதியில் பல்வேறு வாய்ப்புகள் இருக்கிறது. அது மருத்துவத்துறை, கல்வியாகட்டும் தொழில்துறை அல்லது சுற்றுலா துறை போன்ற பல்வேறு விதங்களில் கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் அதற்கு முழு ஒத்துழைப்பு இருக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். அவர் கோவைக்கு வந்து நேரடியாக பார்க்க வேண்டும் எனவும் தான் கோரிக்கை வைத்து இருப்பதாகவும் கூறினார். அடுத்த மாதத்தில் கோவைக்கு வருவதாகவும் உறுதி அளித்து இருக்கிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்களிடம் சிறுநீரகம் ஏமாற்றி லட்சக் கணக்கான ரூபாயை கொடுப்பதாக கூறி இடைத்தரகர்கள் பல்வேறு நபர்களிடம் முறைகேடு செய்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஊடகங்களிலும் அதற்கான செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் இது திருட்டு அல்ல முறைகேடு என்னும் வார்த்தையை சொல்லி இருக்கிறார்.

திருட்டாக இருந்தாலும் முறைகேடாக இருந்தாலும் அதை தடுப்பதற்காக தான் மாநில அரசு இருக்கிறது. பதில் சொல்லி மழுப்புவதற்காக அவர்கள் இல்லை.
ஒரு ஏழை தொழிலாளர்கள் அவர்களுக்கு ஒரு பிரச்சனையின் போது இந்த சிறுநீரகத்தை விற்கலாம் என்பதற்கான வாய்ப்பு இருந்து உள்ளது, இத்தனை வருட காலம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான ஒரு குறிப்பிட்ட மருத்துவமனை நோக்கி இந்த குற்றச்சாட்டு எழுகிறது என்றால், மாநில அரசு இவ்வளவு வருடம் பாராமுகமாக செயல்பட்டு இருக்கிறது.

ஆனால் நலம் முகாம், இதன் மூலம் மருத்துவ வசதி செய்து கொடுக்கிறோம் என தேர்தல் வந்தவுடன் மாநில அரசு ஆரம்பித்து இருக்கிறது. கிட்டத்தட்ட கடந்த மூன்று வருட காலமாக நலம் என்கின்ற மருத்துவ முகாமை நாங்கள் வார, வாரம் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

Psg மருத்துவக் கல்லூரியோடு சேர்ந்து இந்த முகாமினை நாங்கள் கோயம்புத்தூரில் நடத்திக் கொண்டு இருக்கிறோம். தேர்தல் வரும் போது தான் நலத்தைப் பற்றி மாநில அரசிற்கு அக்கறை வந்து இருக்கிறது.

அதனால் இந்த சிறுநீரக குற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை பாரதிய ஜனதா கட்சியின் முன் வைக்கிறது.

இதை மாநில முதல்வர் உடனடியாக கவனித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

எந்தெந்த பகுதிகளில் யார் ? குற்றச் செயல்கள் செய்தாலும், மதமோ ? இனமோ ? மொழியோ ? ஒரு தடையாக இருக்கக் கூடாது. குற்றத்தை சம்பந்தப்பட்டு இருப்பவர்கள் எந்த ? மதம், மொழி, இனத்தை சார்ந்து இருந்தாலும், எந்த மாநிலம் என்று பார்த்து நடவடிக்கை எடுத்தோமானால், அது நியாயமான வேலையாக இருக்காது. யார் குற்றத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களோ ? அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான், சட்டத்தின் வழி நடக்கின்ற அரசுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

பி.ஜே.பி யோட கருத்துகளுக்கு அ.தி.மு.க உடன்பட்டு இருக்கிறது என திருமாவளவன் கூறிய கருத்திற்கு,

திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தற்போது கூட்டணி வைத்து இருக்கிறார். அடிக்கடி கூட்டணிக்கு தலைவராக இருக்கக் கூடிய மாநில முதல்வரை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்.
அப்பொழுது அவரிடம் என்ன கேட்க வேண்டும் என்றால், திராவிட முன்னேற்ற கழகம் பி.ஜே.பியோடு கூட்டணி வைத்து இருந்தார்களே, அப்போது அவர்களுடைய, கருத்தியலோடு முழுமையாக ஒத்துழைந்து அதை ஏற்றுக் கொண்டு கூட்டணி வைத்தீர்களா ? என கேள்வி கேட்க வேண்டும்.

அதற்கு அவர் பதில் சொல்லிய பிறகு நாங்கள் நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்கிறோம் என்றார்.

கேரளா பைல்ஸிற்கு, நேஷனல் அவார்ட் கிடைத்தது பற்றிய கேள்விக்கு, நேஷனல் அவார்ட் என்பது, முழுக்க முழுக்க படைப்புத்திறன் அந்த படைப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் விதம் போன்றவற்றிற்காக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ ? பேர் மத்திய அரசிற்கு எதிராக, பாரதிய ஜனதாவிற்கு எதிராக, பிரதமர் மோதிக்கு எதிராக எழுதியும், பேசையும் வருகிறவர்கள் எல்லாம் தேசிய விருது வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி ? என்றால் ஒரு படத்திற்கு கொடுத்ததன் மூலம் யார் ? ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று எப்படி ? சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் இது போன்ற எத்தனையோ ? விருதைகளை நான் சொல்ல முடியும். முழுக்க, முழுக்க இது மத்திய அரசு சார்ந்ததல்ல அது ஒரு படைப்பு சம்பந்தப்பட்ட விஷயம் எனக் கூறினார்.
ஆணவக் கொலை குறித்த கேள்விக்கு,
சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு முறை பேசிக் கொண்டே இருக்கிறோம், நாளுக்கு, நாள் சட்டம் – முழுங்கு சீர்கேட்டு கொண்டு தான் இருக்கிறது. திராவிட மாடல் என பேசிக்கொள்ளும் மாநில அரசு முழுக்க, முழுக்க சட்டம், ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் மீதான தாக்குதல் இவற்றை தடுப்பதில் முழுமையாக தோல்வி அடைந்து இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெண்கள் தொடர்பான குற்றங்கள் போதை பொருட்கள் ஆணவக் கொலைகள், சாதிய மோதல்கள் போன்றவை, அதேபோல காவல் துறையின் லாக்கப் மரணங்கள் போன்றவை தொடர்ந்து நடைபெறுகிறது. இது போன்ற எந்த இடத்திலும் மாநில அரசு சட்டமுழுக்கு எந்த விதத்திலும் பராமரிக்கவில்லை. நாளுக்கு, நாள் நிலைமை மோசமாகி கொண்டு தான் இருக்கிறது. அதை மறைப்பதற்காக உங்களுடன் ஸ்டாலின், நலம் முகாம் போன்ற முகாம்களை தேர்தல் வரும் நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்ப தி.மு.க பார்க்கிறது.

நீதிமன்றத்தினுடைய தீர்ப்புக்கு பின்பாக கூட இந்த நலம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்று சொன்னால் நீதித்துறையின் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வைத்து இருக்கக் கூடிய மாநில அரசு, நீதிமன்றத்தை மதிக்கவில்லை என்றால் குடி மக்களுக்கு இந்த அரசு என்ன செய்யும் ? என்ன செய்தி சொல்ல விரும்புகிறது?. தெளிவான ஆர்டர் போட்டும் கூட தொடர்ச்சியாக அவர்கள் அதை நடத்துகிறார்கள் என்றால் நீதிமன்றத்தை அவர்கள் மதிக்கவில்லையா?.
ஓ.பி.எஸ்., பி.ஜே.பி யில் இருந்து விலகி விட்டார்.. முதல்வரை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார். என்ற கேள்விக்கு, மாநிலத்தின் முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என அவர்களே நட்பு ரீதியாக விசாரிக்க ஓ.பி.எஸ்., பிரேமலதா போன்றவர்கள் வந்து இருப்பதாக அவர்களே கூறி கொள்கிறார்கள். மற்றொருபுறம் கூட்டணி தேர்தல் என்பதற்கு இன்னும் 7 மாத காலம் இருக்கிறது. 7 மாத காலத்தில் என்னெல்லாம் மாற்றம் வரப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்த வரை, யாரெல்லாம் வரும் காரணங்களில் உள்ளே வருகிறார்கள் என்பதை தேசிய தலைமை அந்தந்த நேரத்தில் நிச்சயம் அறிவிக்கும்.
அதேபோல எந்த குழப்பமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை, இங்கு இருக்க கூடிய ஒரே குறிக்கோள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக பலமான கூட்டணியை அமைப்பது மட்டும் தான். திராவிட அரசிற்கு எதிரான வாக்குகளை, ஒரு மித்த அடிப்படையிலே கூட்டணி பெறுவது மட்டும் தான். இதைத் தான் எங்களுடைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தெளிவாக கூறி இருக்கிறார். இதில் யார் வருகிறார்கள் ? யார் செல்கிறார்கள் ? என்பதெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியின், தலைவர்கள் அறிவிப்பார்கள்.

அதேபோல ஓ.பன்னீர்செல்வம் இந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். அவருடைய இந்த கருத்திற்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. அது மட்டுமல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டணி தலைவர்கள் இவர்கள் தொடர்பான எல்லா விதமான கேள்விகளுக்கும் எங்களுடைய தேசிய தலைவர்கள் எடுக்கின்ற முடிவுகள் தான் இறுதியான முடிவுகள். அவர்கள் பேசும் வரை நாங்கள் யாரும் கருத்துக்கள் தெரிவிக்க விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்று, வாக்கு கேட்டு போகும் மக்கள் எதிரிகள் அல்ல, அவர்கள் கட்சிகளுக்கு உள்ளேயே ஒற்றுமையில்லாத சூழல் இருக்கிறது.

கட்சியே இன்று ஒரு முகத்தில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. எதிர்க் கட்சிகளை நிச்சயமாக நாங்கள் விமர்சிப்போம். எங்களுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாங்கள் என்ன பதில் தர முடியுமோ ? அதை மட்டுமே கொடுப்போம்.

ராமதாஸ் தன்னை ஒட்டு கேட்டதே தன்னுடைய மகன் அன்புமணி எனக் கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, ஒரு தந்தையும், மகனுமாக இருக்கின்ற ஒரு கட்சியின் சூழல், வெளியில் இருந்து அவர்களுடைய கருத்துக்களை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால் சரியாக இருக்காது. உறவுக்குள் நாங்கள் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. பா.ம.க தலைவர்களுக்கு உள்ளாக நடக்கும் விஷயங்கள் இதுவல்ல, டெக்னாலஜி விஷயமாக இது போன்ற விஷயங்கள் நிறைய நடந்து கொண்டு இருக்கிறது.
தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கக் கூடாது அல்லவா என்ற கேள்விக்கு, செக்யூரிட்டி ரீசனுக்காக இது போன்று கேட்பது நடைபெறும். ஆனால் மாநில அரசு கூட அதை செய்து கொண்டு இருக்கிறது. அதைத் தவறு என நாம் சொல்ல முடியாது.

அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு, ஒரு அரசியல் கட்சி பற்றிய யூகங்கள் எதுவும் தேவையில்லை என்று கூறினார்.

தேர்தல் கமிஷன் குறித்த கேள்விக்கு, தேர்தல் கமிஷன் யாரை வாக்காளர்களாக சேர்த்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகள் வைத்து இருக்கின்றனர். டெல்லி, மும்பை போன்ற இடங்களில் தமிழர்கள் வசிக்கிறார்கள். மும்பையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ வாகவே இருக்கிறார். எல்லா இடங்களிலும் இந்தியா முழுக்க யாரு ? எந்த மாநிலத்தைச் சார்ந்தவர், மொழி பேசுகிறார் என்பது வாக்குரிமை அல்ல.

அனைவரும் இந்திய குடிமக்கள். வாக்குரிமை கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அந்த இடத்தில் வசிக்க வேண்டும். இவ்வளவு வயது ஆகி இருக்க வேண்டும் என்பது தான் சட்டத்தில் தேர்தல் கமிஷன் வைத்து குருக்கிறது.. இந்த மொழி பேசுபவர்கள் அந்த மாநிலத்திற்கு சென்றால் வாக்கு அளிக்கக் கூடாது என்பது சட்டத்தில் இல்லை. சட்டத்தின் படி தேர்தல் கமிஷன் என்ன நடைமுறை இருக்கிறதோ ? அதை செய்யும்.

வடமாநில தொழிலாளர்கள் மீது திட்டமிட்ட ரீதியில் வெறுப்பு கருத்துக்களை பேசுகிற, வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக பேசுவதன் காரணமாக தன்னுடைய அரசியல் செல்வாக்கு வளரும் என நினைக்கும் தலைவர்கள் பிரிவினை வாதம் பேசுகின்ற தலைவர்கள் இது போன்ற விஷயங்களை பேசுகிறார்கள். சான்ற ஆவணங்களை வைத்தே தேர்தல் கமிஷன் பதிவு செய்கிறது. பீகாரில் யாருக்கு சரியான ஆவணங்கள் உள்ளதோ, பெயர் விடுபட்டதோ ? அவர்கள் அப்பீல் செய்து இருக்கிறார்கள்.

உண்மையான ஆவணங்கள் இருப்பவர்களை அவர்கள் வெளியே எடுக்க மாட்டார்கள் நம்மூரில் என்ன நடைமுறை இருக்கிறதோ ? அதுவே தான் அங்கேயும் இருக்கிறது என்று கூறினார்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group