நம்ம சிரிக்க வைத்த நடிகர் மதன் பாப் காலமானார்!

சென்னை: நடிகர் மதன் பாப் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

மதன் பாப் கடந்த 1953,ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். கிருஷ்ண மூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சினிமாவிற்குள் நுழைகையில் தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

Advertisement

இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்த மதன் பாப்பிற்கு கடந்த 1984ம் ஆண்டு வெளியான நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் நடிகராகும் வாய்ப்பு கிடைத்தது.

குணச்சித்திர, நகைச்சுவை நடிகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்த மதன் பாப், ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் படங்கள் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு படங்கள் என சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் மதன் பாப் நடித்துள்ளார்.

Advertisement

இதனிடையே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 71.

மதன் பாப் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

தனது தனித்துவமான சிரிப்பு மற்றும் உடல் மொழியுடன் நம்மை சிரிக்க வைத்த மதன் பாப் மரணத்திற்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதன் பாப் நடித்த காமெடி காட்சிகளில் சில:-

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

விஜய் வெற்றி.. சொன்னதை செய்த பாண்டா.. அப்போ பாண்டே?

விஜய்க்கு எதிராக சவால் விட்டு பிரசாந்த் ரங்கசாமி மொட்டை அடித்து கொண்டது போல் ரங்கராஜ் பாண்டேவும் சொன்னதை செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொட்டை போட்ட பாண்டா ஆரம்பத்தில் பிரசாந்த் ரங்கசாமி நடிகர் விஜய் குறித்து...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...