கோவை: திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடியுள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கோவை
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி செயல்பாடு சிறப்பாக இருக்கிறது என தெரிவித்தார்.
தேர்தல் அரசியலில் மகளிர் வாக்குகள் என்பது முக்கியத்துவம் பெற்று வருகின்றது எனவும் அகில இந்திய அளவில் தேர்தல் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் இடத்தில் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். தேர்தல் அரசியலில் முடிவு எடுக்கும் இடத்தில் பெண்கள் இருக்கின்றனர் என்றும், 50 சதவீத இட ஒதுக்கீடு, பா.ஜ.கவில் உள்ள 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளது என்றார். சட்டமன்றத் தேர்தலுக்கு மகளிர் அணியை தயார் படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் பா.ஜ.க மகளிர் அணி மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவருகின்றது என தெரிவித்தார். கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என எம்.பி தமிழச்சி வலியுறுத்தி இருப்பது குறித்த கேள்விக்கு, தமிழகத்தில்
பல்வேறு நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது எனவும் , அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு தேவைபடும் என்றால் பரீசிலனை செய்யும் என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற
நீதிபதி , திமுக கொள்கை சார்ந்து செயல்படவில்லை என்பதற்காக , இன்பீச்மென்ட் மோசன் கொண்டு வந்து இருக்கின்றனர், அந்த நீதிபதி மீது எந்த குற்றசாட்டும் கிடையாது, இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தார் என்பதற்காக அவருக்கு எதிராக இம்பீச்மென்ட் மோசன் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். நீதித்துறையில் லஞ்சலாவண்யம்,ஊழல் போன்றவை கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றது, நீதிபதிகள் பற்றாகுறை, ஊழியர் பற்றாகுறை என இருக்கின்றது, இதை பற்றி எல்லாம் திமுக அரசு கவலை படவில்லை என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை , அமைச்சர்கள் மீதான குற்றசாட்டு என இருக்கும் போது அதைப் பற்றி எல்லாம் கவலைபடாமல்,
இம்பீச்மென்ட் மோசன் கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார். இதை ஓவ்வொரு வீட்டிற்கும் மகளிரணி கொண்டு செல்லும் என்றும் கூறினார்.
இந்து மத வழிபாட்டு உரிமைகளை மதிக்க வேண்டுமா , இல்லையா? தர்கா எங்கேயும் பிரச்சினை இல்லை, இந்து அறநிலைய துறை தான் பிரச்சினை செய்கின்றது எனவும் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கேட்டால், காசு கொடுங்கள் அப்பொழுது தான் நடத்த முடியும் என அதிகாரிகள் சொல்லும் நிலை பல இடங்களில் இருக்கிறது என குற்றம் சாட்டினார்.
அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்துவது தான் மதச்சார்பின்மை என்று தெரிவித்தார். ஆந்திர கோயில்களில் எந்த வித தவறுகள் நடந்து இருந்தாலும் ஆந்திரா அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் கூட்டணி நன்றாகத் தான் இருக்கிறது, எந்த பிரச்சனையும் இல்லை நல்லபடியாக உறவுகள் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். இட ஒதுக்கீடு முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கின்றது என்றார். சாதி ரீதியான முழுமையான கணக்கெடுப்பு இல்லை , அதனை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இதையும் சேர்த்து நடத்த வேண்டும் என கோரிக்கையாக முன்வைத்து இருக்கின்றோம் என்றார்.
தவெக – பாமக ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கலாம் என்றார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார், அதனால் அந்த விவகாரத்தில் அவர் உறுதியாக இருக்கின்றார் என தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜிக்கு பதட்டம் இருக்கிறது எனவும், எனவே எல்லையோரத்தில் இருப்பவர்கள் எவ்வளவு பேர் இந்தியர் என்பதிலேயே சந்தேகம் இருக்கிறது எனவும் கள்ள ஓட்டினால் ஜெயித்த கட்சிகள் அனைத்தும் எஸ் ஐ ஆர் யை எதிர்க்கின்றனர் எனவும் தெரிவித்தார்.



