புதிய கிரைம் கதை இது- OTHERS பட இயக்குநர் கோவையில் பேட்டி

கோவை: எந்த படத்தில் இல்லாத கிரைம் கதையை இதில் காணலாம் என OTHERS பட இயக்குநர் எபின் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் எபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன், கெளரி கிஷன், முனிஸ்காந்த், ஜகன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள் “OTHERS” திரைப்படம் நவம்பர் 7 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரொமோசன் பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று கோவை ப்ராட்வே சினிமாவிற்கு வந்த இயக்குனர் எபின் ஹரிஹரன், நடிகர் ஆதித்யா மாதவன், முனிஸ்காந்த், நடிகை கெளரி கிஷன் ஆகியோர் ட்ரெய்லரை திரையிட்டு அங்கிருந்த பார்வையாளர்களிடம் கலந்துரையாடி படம் எவ்வாறு இருக்கும் என கலந்துரையாடினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த படத்தின் இயக்குநர் எபின் ஹரிஹரன், இதுவரை எந்த படத்திலும் வராத கிரைம் கதை இந்த படத்தில் இருப்பதாக கூறினார். மருத்துவ துறையில் IVF சார்ந்த கிரைம் த்ரில்லர் படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எந்த மருத்துவமனையையும் மருத்துவர்களையும் குறிபிட்டு அவர்களுக்கு எதிராக இதனை எடுக்கவில்லை என்றார். மேலும் இந்த படத்தில் வேலை செய்த அனைவரும் அவரவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளதாக இயக்குநர் கூறினார்.

Advertisement

தொடர்ந்து படத்தின் அனுபவங்கள் பற்றி நடிகர்கள் ஆதித்யா மாதவன், முனிஸ்கான், கெளரி கிஷன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

Recent News