Header Top Ad
Header Top Ad

Coimbatore Weather : கோவையில் இந்த வார வானிலை முன்னறிவிப்பு!

Coimbatore Weather : கோவையில் இந்த வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை (29 செப்டம்பர்):

மாநகரின் ஒரு சில பகுதிகளில் சிறிய அளவிலான சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி.

செவ்வாய் (30 செப்டம்பர்):

Advertisement

கோவையில் மாலை நேரத்தில் சில இடங்களில் மட்டும் மழைத்துளிகள் படியக்கூடும். பகலில் வெப்பம் இருந்தாலும், அவ்வப்போது மேகமூட்டம் ஏற்பட்ட குளுமையாக்கும். அதிகபட்ச வெப்பம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி.

புதன் (1 அக்டோபர்):

மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளது. நாள் முழுவதும் சீரான வெப்பநிலை காணப்படும். அதிகபட்ச வெப்பம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி.

வியாழன் (2 அக்டோபர்):

புறநகர்ப் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்யலாம். வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பம் 35 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி.

வெள்ளி (3 அக்டோபர்):

நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இடங்களில் வறண்ட வானிலை இருக்கும். அதிகபட்ச வெப்பம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 24 டிகிரி.

சனி (4 அக்டோபர்):

வார இறுதியில் கோவையில் மேகமூட்டம் அதிகரிக்கும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 24 டிகிரி.

வானிலை மைய கணிப்பின் படி கோவையில் இந்த வாரம் ஒரு சில இடங்களில் சாரல் மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த 7 நாட்களிலும் கோவையில் அதிகபட்சம் 33 முதல் 35 டிகிரிக்கும், குறைந்தபட்சம் 23 முதல் 24 டிகிரிக்கும் இடையே வெப்பநிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் கணிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை. அவ்வாறு மாற்றமடையும் போது, நமது செய்தித்தளத்தில் அப்டேட் செய்யப்படும். இணைந்திருங்கள்.

Recent News