கோவை: தங்கம் & வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் கிராம் ரூ.7,150க்கு விற்பனையான 22 காரட் ஆபரணத் தங்கம் தற்போது ரூ.8 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,035 விலை அதிகரித்துள்ளது.
இதனிடையே இன்று தங்கம் விலை சற்று சரிவைச் சந்தித்துள்ளது.
கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 விலை குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.8,185க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.65,480க்கும் விற்பனையாகிறது.

18 காரட் தங்கமும் விலை குறைவைச் சந்தித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.20 விலை குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.6,765க்கும், ஒரு பவுன் ரூ.54,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்துக்கு இணையாக போட்டிபோட்டு விலை அதிகரித்து வரும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.