கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தரும் பொறுப்பு காவல் துறைக்கு உள்ளது என துணைக் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் காரமடை அருகே ஒன்னிபாளையம் பகுதியில் உள்ள எல்ல கருப்பராயர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் விமானம் மூலம் கோவை விமான வந்தடைந்தார்.
அதனைத் தொடர்ந்து விமான நிலைய VIP EXIT க்கு வெளியில் நடந்து வந்த அவர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாஜகவினரின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தனிநபர் தன் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்வது கடினம் என்ற சிந்தனைக்கு சொந்தக்காரன் நான் என்றும் கோவையில் நடைபெறும் விளக்குப் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள் அதனால் இரண்டாவது முறையாக கோவைக்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.
கோவையில் தனியார் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், நடக்க கூடாத ஒரு கொடூரம் நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனை தருகிறது என தெரிவித்தார்.
குற்றவாளிகள் பிடிக்கப்படுவதும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவதும் காவல்துறையின் பொறுப்பு கண்ணும் கருத்துமாக அதனை செயல்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
சகோதரிக்கும் அவரது பெற்றோருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் இது நடக்க கூடாதது தான் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது என்றும் வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.


