கோவையில் பரிதாபம்: விபத்தில் தந்தை -மகன் பலி!

கோவை: கோவையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

துடியலூர் ரோடு தக்ஷிகா யாழினி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36 ). இவரது மகன் வினித்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

வினித் தினமும் காலையில் காளப்பட்டியில் உள்ள தனியார் ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி பெறுவது வழக்கம்.

இதற்காக தினமும் காலையில் பைக்கில் தந்தை ராஜேஷ் அவரை அழைத்து சென்று வருவார்.
 இன்று காலை வழக்கம் போல் வினித்தை அழைத்துக் கொண்டு ராஜேஷ் களப்பட்டிக்கு சென்றார்.

சத்தி ரோடு – காளப்பட்டி ரோட்டில் உள்ள பேக்கரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற ராஜேஷ், அவரது மகன் வினித் ஆகியோர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீசார் இருவர் உடல்களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Recent News

Video

Join WhatsApp